சுதந்திர தினம் மற்றும் புற்றுநோய் ஒழிப்பு தினம் என்பவற்றை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம்

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் நாட்டின் 75வது சுதந்திர தினம் மற்றும் புற்றுநோய் ஒழிப்பு தினம் என்பவற்றை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் தொற்றாய் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம் ஐ எம் எஸ் இர்சாத் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இச்சைக்கிள் ஓட்ட நிகழ்விற்கு மருதமுனை ரைடர்ஸ் ஹப் (Riders hub) சைக்கிளோட்ட கழகத்தினரின் பங்களிப்புடன் இச்சைக்கிள் ஓட்ட விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் எம்.பீ.ஏ வாஜித் மற்றும் பணிமனையின் பிரிவு தலைவர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கினார்கள்.