பட்டிப்பளைப் பிரதேசத்தில் முதலாவது சைவப்புலவர்

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் முதன்முறையாக சைவப்புலவர் பட்டம் பெற்றார் மகிழடித்தீவு கிராமத்தைச் சேர்ந்த வே.மகேசரெத்தினம்.
குறித்த சைவப்புலவர் பட்டமளிப்பு விழா அண்மையில் கொழும்பில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர், தர்மாசிரியர், கலைமாணி, முதுமாணி பட்டங்களைப் பெற்ற இவர், ஆசிரியராகவும், அதிபராகவும் நீண்ட காலம் சேவையாற்றியுள்ளார்.

ஒளிக்கல்லூரியின் அதிபராகவும், மண்முனை தென்மேற்கு அரசசேவை ஓய்வூதியர்களின் நிதியத்தின் செயலாளராகவும், அபிவிருத்தி ஒன்றிய ஆலோசகராகவும், கலாசாரபேரவையின் உறுப்பினராகவும் ஆலயங்களில் நிருவாகத்தில் பதவிகளையும் வகித்து பல்வேறு சேவைகளை இன்றுவரை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.