மக்களாணைக்கு அச்சமடைந்து தேர்தலை பிற்போட முயற்சிப்பதையிட்டு அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் – வாசுதேவ நாணயக்கார!

மக்களாணைக்கு அச்சமடைந்து தேர்தலை பிற்போட முயற்சிப்பதையிட்டு அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அடிப்படையில் போட்டியிட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எந்த கட்சியும் இனி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.