சுதந்திரக் கட்சியின் பெயர் பலகை மாத்திரமே மைத்திரி தரப்பிடம் உள்ளது – மஹிந்த அமரவீர!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயர் பலகை மாத்திரமே மைத்திரி தரப்பிடம் உள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சி ஆதரவாளர்கள் தங்கள் பக்கமே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்ளாட்சி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வாறு போட்டியிடும் என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், தாங்களே உண்மையான சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.