(வாஸ் கூஞ்ஞ)
கிளிநொச்சி பகுதியில் யுத்தத்தினாலும் இயற்கையினாலும் தற்கால பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் மக்களுக்க நீண்ட காலமாக பணியாற்றிவரும் பெண்கள் வாழ்வுரிமை சங்க நிறுவனத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதுடன் பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் சம்பவம் புதன்கிழமை (28) மற்றும் வியாழக்கிழமைக்கு (29) இடைப்பட்ட இரவு நேரத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது
கிளிநொச்சிப் பகுதியில் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரைக்கும் பணியாற்றிவரும் பெண்கள் வாழ்வுரிமை சங்க நிறுவனமானது யுத்தத்தினாலும் , இயற்கையினாலும் , தற்கால பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் மக்களுக்க நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஓர் அமைப்பு எனவும்
அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிமை ரீதியாகவும் பல வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வரும் ஒரு நிறுவனமாகவும் இது திகழ்ந்து வருகின்றது.
இந்த நிலையில் இங்கு கடமைபுரிவோர் புதன்கிழமை (28) மாலை 4.30 மணியளவில் இவ் அலவலகக் கடமைகளை முடித்துக்கொண்டு வீடு சென்றபின் பின் வியாழக்கிழமை (29) காலை அலுவலகர்கள் வழமைபோன்று அலுவலகம் வந்த பார்த்தபோது அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் சேதமாக்கப்பட்டும் திருடப்பட்டும் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் அலுவலகத்திலிருந்து 02 மடிக்கனணிகள் சீசீரிவி கண்காணிப்பு பெட்டி , கனணிப் பொருட்கள் . முக்கிய ஆவணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் செயலானது பாதிக்கப்படும் தேவையுடைய மக்களுக்கு ஆற்றிவரும் சேவையினை முடக்கும் நோக்குடனும் மக்களுக்காக குறிப்பாக சிறுவர் , பெண்களுக்காக குரல் கொடுப்பதை தடுக்கும் நோக்குடனும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட செயல்பாடாக இது அமைந்துள்ளது என பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.