ஒரு பஸ் டிரைவரால் ஜனாதிபதி ஆக முடியாதா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி.

மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியினால் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,அது சுகாதாரம் மற்றும் கல்வித் துறையை இலக்காகக் கொண்டு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்
பதாகவும்,மக்களைக் காப்பாற்றுவதும், திருட்டை முறியடிப்பதும் இதில் மிக முக்கியமான பகுதியாகும் எனவும், இந்த திட்டத்திற்காக உழைக்க முடியாத இடதுசாரி சோசலிசக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழுவினர் பெரும் சவால்களையும் அவமானங்களையும் கேலிகளையும் மேற்கொள்வதாகவும்,இந்நாட்டில் சி.டி.பி டைவர் ஒருவர் நாட்டின் தலைவராக வர முடியுமா என அவர்கள் அவமானப்படுத்தினாலும்,தற்போதைய இந்தியப் பிரதமர் ரயிலில் சிறுது காலம் டீ விற்றவர் என்பது அவர்களுக்குத் தெரியாது போல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

‘பிரபஞ்சம்’வேலைத்திட்டத்தின் கீழ் 54 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம்(5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று
அவிசாவலை சீதாவக்க தேசியப் பாடசாலைக்கு இன்று (29) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.