“லெனின் மதிவானம் ”இளமை – புலமை- இனிமை” நூல் வெளியீட்டு விழா!

(வி.ரி.சகாதேவராஜா)

அமரர் லெனின் மதிவானம் நினைவாக தொகுக்கப்பட்டுள்ள ‘லெனின் மதிவானம் இளமை – புலமை- இனிமை” எனும் நூல் வெளியீடு (31) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சாஹித்யரத்னா மு. சிவலிங்கம் தலைமையில் ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பாக்யா பதிப்பகத்தின் வெளியீடாக , நோட்டன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், வரவேற்புரையை வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளருமான மு.இராமச்சந்திரன் நிகழ்த்தவுள்ளார்.

பேராசிரியர் பால. சுகுமார், மல்லியப்புசந்தி திலகர், ஜே.சற்குருநாதன், சிராஜ் மஷ்ஹுர், சுமதி அன்பரசு, சிவ ஜேசு நேசன், ச.வில்சன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வில், நன்றியுரையினை அமரர் லெனின் மதிவானனின் இளைய சகோதரரும் நீதிபதியுமான ஆர்.ஜே.ட்ரொட்ஸ்கி வழங்குவார்.

பிரபல ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.