ம. தெ. எருவில் ப. பிரதேச சபையின் பாதீடு வெற்றி.(Vedio)

 

(எருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று (29) தவிசாளர் சோ.சற்குணராசா அவர்களின் தலைமையில் சமர்பிக்கப்பட்டது.

சபையின் 21 உறுப்பினர்களில் 20 பேர் பிரசன்னமாகியிருந்தனர். அவர்களில் துறைநீலாவனையைச் சேர்ந்த க.சரவணமுத்து உறுப்பினர் அவர்கள் சபையில் உள்ள 21 உறுப்பினர்களுக்கும் பத்து இலட்சம் வீதம் ஒதுக்குவதை தவிர்த்து வட்டார ரீதியாக ஒதுக்கீடு செய்யுமாறு வேண்டியிருந்தர். அதற்கு சபை ஒத்துழைக்காததன் காரணமாக வெளிநடப்பு செய்ய உறுப்பினர் த.தவராணி அவர்கள் சபைக்கு சமூகமழிக்கவில்லை. அதனடிப்படையில் 19 அதிகப்படியான வாக்குகளால் 2023ம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி பெற்றது.