அமெரிக்காவினால் இலங்கைக்கு மருத்துவ பொருட்கள் நன்கொடை!

அமெரிக்காவினால் இலங்கைக்கு மருத்துவ பொருட்கள் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Heart to Heart International அமைப்பினால் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவ பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தினை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால், நாட்டில் மருந்து பொருட்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இந்த நன்கொடை அந்த நெருக்கடியை சற்று நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகின்றது.