மட்டக்களப்பில் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் !!

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம்  உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் தலையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (28) இடம் பெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக மட்டத்திலும் உள்ள சிறுவர்களுக்கு  துரிதமாக சேவை வழங்குதல் மற்றும் சேவை வழங்கும் போது எற்படும் பிரச்சினைகள், சாவால்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தல்  விரிவாக ஆராயப்பட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன் முன்பிள்ளை  பருவத்துடன் தொடர்புடைய வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மற்றும் பாடசாலை மாணவர்கள் இடைவிலகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதுடன் குறித்த மாணவர்களை மீண்டும் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுத்துவதினால் அவர்களை சிறந்த நபர்களாக மாற்ற முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.சுகுனன், பிராந்திய  உளவள வைத்திய அதிகாரி டான் செளந்தரராஜன், பிரதேச செயளாலர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட முன் பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.முரளிதரன், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகஸ்தர்கள் மற்றும் வலய கல்வி உத்தியோகத்தர்கள் என பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.