அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு இடம் கொடுக்க மாட்டேன்: அமைச்சர் டக்ளஸ்

அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு தான் இடம் கொடுக்க மாட்டேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியளாரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அட்டைப்பண்ணைகள் செயல்படுத்தப்படும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

அட்டைப் பண்ணைகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலர் அட்டப்பண்ணைகளை வேண்டாம் என பிரச்சாரம் செய்கிறார்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய தேவை இல்லை எனவும் தவறுகள் இருந்தால் அதை சரி செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.