‘அரசியல் கைதிகளின் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் சுயநல அரசியல் நோக்கத்துடன் செயற்படக் கூடாது’

அரசியல் கைதிகளின் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் சுயநல அரசியல் நோக்கத்துடன் செயற்படக் கூடாது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பில் முதலாவதாக இந்த பிரசினையை முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னர், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழ் தரப்புக்கள் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்ளவர்களின் உண்மையான விபரம் வெளிவர வேண்டும் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.