தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு !

இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தீர்வு விடயத்தில் பெரும்பான்மையின கட்சிகள் எதிர்ப்பினை வெளியிடவில்லை என கூறினார்.

ஐ.நா. உட்பட உலக நாடுகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமிழர்களுக்கான தீர்வு குறித்த விடயத்தில் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதால் நியமன தீர்வு கிடைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.