அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர் – கொழும்பு பேராயர்

நாட்டில் அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர் என குற்றம் சாட்டிய அவர், இது எமது நாட்டில் பரவியுள்ள ஒருவகை நோய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இன்றைய சூழலில் பொய்களுக்குப் பின்னால் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற ஆராதனைல் உரையாற்றும் போதே பேராயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதன் மூலம் உணவு உண்பதற்கு நாம் பழகியுள்ளமை வெட்கப்பட வேண்டிய முன்னுதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் சொத்துக்களுக்கும் அதிகாரத்துக்கும் அடிமையாகாமல் அவற்றிலிருந்து மீள வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் போதிப்பதாகவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.