இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டில் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்-நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக இந்நாட்டில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.