சஜித்திற்கு ஆதரவு வழங்குவதற்கான நிபந்தனையினை வெளியிட்டார் சாணக்கியன்!

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் முன்வருவாராக இருந்தால், பூரண ஆதரவினை வழங்கத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.