வெளிநாட்டு வேலைவாய்ப்பால் ஏமாற்றம்.

 

(எருவில் துசி) சர்வதேச புலம்பெயர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் மக்கள் வெளிநாடு செல்வது தொடர்பான பூரண அறிவின்மையால் அதிக பணத்தை முகவர்களுக்கு கொடுத்து ஏமாற்றப்படுவதாக இன்று(22) எஸ்கோ நிறுவனத்தினால் ஊடகவியலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தாடலின்போது தெரிவிக்கப்பட்டது

மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பான பல இலகுவான வழிமுறைகள் இருந்தும் அவைகளை சரியாக பின்பற்றாது போலி நபர்களின் பாசாங்கு வார்தைகளுக்கு ஏமாற்றப்பட்டு அதிக பணத்தினை முகவர்களுக்கு கொடுத்து வெளிநாடு செல்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தவர்களிடம் மாத்திரம்தான் வெளிநாடு செல்வதற்கு வெளிநாடு செல்பவர்கள் அனுக வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட சிலர்தான்; உத்தியோகபூர்வமாக பதிவு செய்து கொண்டுள்ளனர் இதை நாம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகத்தின் இணையத்தளத்தின் ஊடாக அறிய முடியும். வெளிநாட்டு வேலைவாப்புக்கள் பதிவு செய்யப்பட்ட முகவர்களுக்கு பகிர்ந்தழிக்கும் போது அது தொடர்பான முழுமையான விபரத்தினை இணையத்தின் ஊடாக அறிய முடியும் அதாவது வேலை தொடர்பான விபரணம், வேதணம் போன்ற அனைத்தையும் அறிய முடியும்.

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு தொழில் பாதிப்புக்கள் மற்றும் மரணம் ஏற்டுபகின்;ற பட்சத்தில் விரைவாக நாடு வந்தடைவதற்கான வாய்ப்புக்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சு என்பன ஏற்படுத்துகின்றது. தற்போது பிரதேச செயலகங்களில் வெளிநாட்டு செல்பவர்களின் பிரட்சினைகள் தொடர்பான சேவைகளை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சில சேவைகளை பெற முடியும்.

மேலும் ‘மணுசபிய’. ‘சகனபியஷ’ போன்ற சிறப்பான திட்டங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் எஸ்கோ அமைப்பின் பிரதானிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.