ஜனாதிபதியினை சந்தித்தார் சீனத் தூதரகத்தின் பிரதித் தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹூ வெய் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கம் மற்றும் சீன வங்கிகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.