கொட்டும் மழையிலும் கல்முனை வலயப் பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீடுகள்

கல்முனை வலயப் பாடசாலைகளில் கொட்டும் மழையிலும் வெளிவாரி மதிப்பீடுகள் (பாடசாலை மேற்பார்வை) முகாமைத்துவத்திற்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர் முகம்மட் பௌஸ் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

ஏப்ரல் மாதம் இடம்பெறவிருக்கும் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரணதரப் பரீட்சையை முன்னிட்டு வலயத்தால் இடம்பெற்ற பரீட்சையில் நூனசித்தி( w)பெற்றவர்களின் தொடர்பான அடைவை மேம்படுத்தும் நோக்கில் இந்த மேற்பார்வையில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த பரீட்சைக்குத் தோற்றாதோர் இடைவிலகியோர் குறித்த விடயமும் முக்கிய அம்சமாகமேற்பார்வையில் அவதானிக்கப்படுகிறது.

பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் செயற்றிட்ட உத்தியோகத்தர்கள் ஆசிரிய உதவியாளர்கள் பாட இணணப்பாளர்கள் இதில் கலந்து கொள்கிள்கின்றனர்.

கல்முனை வலயக்கல்விப்பாளர்.எம்.எஸ்.ஏ.சஹ்துல் நஜீம் மேற்பார்வை காலத்தில் கண்காணிப்பினை மேற்கொள்ள திடீர் விஜயங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.

அண்மையில் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் முகம்மட் நஸ்முதீனும் வலயத்துக்கு வருகை தந்து பரீட்சை பகுப்பாய்வு தொடர்பாக கல்விசார் உத்தியோகத்தர்கள் அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச் சஙங்கத்தினரை கலந்துரையாடிச் சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.