டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு!

தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முழுமையாக நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுமார் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டினை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.