சீனாவின் 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையின் இறுதி பொதி கொழும்பிற்கு!

இலங்கைக்கு வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை, நிறைவடைந்துள்ளது என இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

அந்த அரிசி கையிருப்பில் உள்ள கடைசி 1000 மெட்ரிக் தொன் அரிசி நேற்று (19) இலங்கைக்கு வழங்கப்பட்டதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த 10,000 மெட்ரிக் தொன் அரிசியின் மூலம் 7,900 பாடசாலைகளில் உள்ள ஒரு மில்லியன் மாணவர்கள் பயனடைவார்கள் என சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.