கடும் மழை காரணமாக வயல் நிலங்கள் மூழ்கடிப்பு

(ஹஸ்பர்)

கடும் அடை மழை காரணமாக கிண்ணியா தம்பலகாமம் சிவத்தபாலம் வீதியும் நீரில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கிகியுள்ளன. கிண்ணியா, தம்பலகாமம் பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

நேற்று (19)பெய்த தொடர் கடும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் வழமைக்கு மாற்றமாக கடும் சிரமங்களை மக்கள் எதிர் நோக்குகின்றனர். மழை நீர் வீதியில் மூழ்கடித்துள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகிறது