இளம் இந்துக்குருமார்களுக்கான கணபதி ஹோமம் பயிற்சி நெறி

(வாஸ் கூஞ்ஞ)

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரின் பணிப்புரைக்கு அமைவாகஇ இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்துப்பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவையின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற மன்னார் மாவட்ட இளம் இந்துக்குருமார்களுக்கான கணபதி ஹோமம் பயிற்சி நெறி கடந்த சனிக்கிழமை (17.02.2022) மன்னார் உப்புக்குளம் ஸ்ரீ இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது

மன்னார் மாவட்ட பேரவையின் தலைவர் சிவஸ்ரீ தியாக இந்துக்குருமார் பேரவையின் கருணானந்தக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்தப்பயிற்சிப்பட்டறையில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் தலைவர் பிரம்மஸ்ரீ சர்வேஸ்வர பத்மநாபசர்மா வளவாளராக கலந்துபயிற்சிகள் வழங்கினார்.