வறுமைக் கோட்டுக்குள் இருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்விக்கு நிதி உதவி – செல்வம் எம்.பி. முன்னெடுப்பு

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்திலிருந்து இவ் நடப்பு வருடத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள வறிய குடும்பங்களைச் சார்ந்த இருபது மாணவர்களுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கல்விக்காக நிதி உதவிகள் வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

திங்கள்கிழமை (19) மன்னாரிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து இவ் மாணவர்களுக்கு இவர்களுக்கான முதல்கட்ட நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்ற நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த உதவி வெளிநாட்டவர்களின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நோர்வே நாட்டில் உள்ள நடேசு அறக்கட்டளை ஊடாக 10 மாணவர்களுக்கும்இ ஜேர்மனியைச் சேர்ந்த நாகரெட்ணம் ஜெயதீபன் மற்றும் புலேந்திரன் ஆகியோர் 10 மாணவர்களுக்கும் இவ் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

வறுமை கோட்டுக்குள் வாழும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இவ் மாணவர் ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி இன்றையத் தினம் வழங்கப்பட்டது.

குறித்த இவ் மாணவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

கல்விக்கான முதல்கட்ட இவ் நிதி உதவி வழங்கலின்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்இ மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து குறித்த உதவிகளை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது