உள்நாட்டு வருவாய் சட்டம் அமுலுக்கு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்ட நிலையில் உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டம் இன்று (19) முதல் அமுலுக்கு வந்தது.

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் கிடைத்தன.

அப்போது எதிர்க்கட்சிகள்மூன்றாம் வாசிப்புக்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரியது. அதற்கமைய ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக முப்பத்தாறு வாக்குகளும் பதிவாகின.

அதன்படி, இந்த சட்டமூலம் 2022 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டமாக இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.