கண்டி-பண்டாரவளை வீதியில் விபத்து-15க்கும் அதிகமான பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி – பண்டாரவளை பிரதான வீதியில் ஹங்குராங்கெத்த போலீஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் பேருந்துகள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் 15க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளை நோக்கி பயணித்த பேருந்தும், பண்டாரவளையில் இருந்து அதே வழியில் கண்டின நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயம் அடைந்த பயணிகள் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலையிலும் மற்றும் சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸ்சார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.