நான்கு கால்களுடன் பிறந்து பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில்  குழந்தை ஒன்று நான்கு கால்களோடு பிறந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாளா என்ற பெண்ணுக்கே இவ்வாறு நான்கு காள்களுடன் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

குறித்த பெண் பிரசவ வலி காரணமாக கம்லா ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, குழந்தை 2.3 கிலோ எடையோடு ஆரோக்கியமாகப் பிறந்துள்ளது. எனினும் குழந்தை  நான்கு கால்களோடு இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ந்துபோயினர்.
அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்புக் நலப்பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில்,
குழந்தை நான்கு கால்களோடு, உடல் குறைபாடோடு பிறந்துள்ளது. சில நேரங்களில் கருவானது இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, உடல் இரண்டு இடங்களில் வளர்ச்சி அடையும் வாய்ப்புள்ளது.இதன்படி, குழந்தையின் இடுப்பு பகுதிக்குக் கீழ் இரண்டு மேலதிக கால்கள் வளர்ந்துள்ளன. அந்த  கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அத்துடன் குழந்தைக்கு வேறு குறைபாடுகள் இருக்கிறதா என ஆராய்ந்து வருவதாகவும். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில், அறுவைசிகிச்சையின் மூலம் செயலற்ற மேலதிக கால்கள் அகற்றப்படும் என்றும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்.