(வாஸ் கூஞ்ஞ)
போதைப் பாவனையற்ற பிரதேசமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கையாக அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த செயலாமர்வில் அக்கரைப்பற்று இன்ஸ்பிரிங் யுத்ஸ் அமைப்பு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
புதன்கிழமை (14/12/2022) அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த ‘போதைப்பாவனையற்ற பிரதேசம்’ என்ற தொணிப்பொருளில் அமைந்த விசேட முதலாவது செயலமர்வு அக்கரைப்பற்று ஜம்மிய அத்துல் உலமா அலுவலகத்தில் அனைத்துப்பள்ளிவாயல் சம்மேளன நிருவாகம், பள்ளிவாயல்கள், பிரதேச செயலகம், இளைஞர் கழகங்கள் பாடசாலைகள் என பல்வேறு பட்ட தொண்டு நிருவனங்களின் பங்கு பற்றுதலோடு நடைபெற்றது.
இதன் போது ஒவ்வொரு துறை சார்பிலும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது இந்த வகையில் அக்கiரப்பற்று இன்ஸ்பிரிங் யுத்ஸ் அமைப்பின் கோரிக்கைளாக பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
போதை ஒழிப்பு நிகழ்வுகளுக்கு முக்கியமாக பீடி, சிகரட் , போன்றவற்றை பாவனை செய்பவர்களையும் நிகழ்வுக்கு அழைப்பதை முற்றாக தடுத்தல்.
பீடி, சிகரட் வியாபரம் செய்யாத கடைகளை மக்களுக்களுக்கு அடையாளப்படுத்தும் வண்ணம் பள்ளிவாசயலில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தல் வேண்டும். அவ்வாறு காட்சி படுத்துவதனால் புகைத்தல் விற்பனையாளர்கள் வெட்கமடையலாம்.
பள்ளிவாயல் நிர்வாகங்களில் பீடி, சிகரட் பாவனை செய்வோரை பதிவியில் இருந்து நீக்க வேண்டும்.
போதை பாவனையில் கைது செய்யப்பட்டவர்கள் பாவனையாளர் அல்லது விற்பனையாளர் என புலனாய்வு பிரிவால் உறுதி செய்யப்பட்டால் அவர்களின் விபரங்களை பள்ளிவாயலில் அடையாளப்படுத்தி காட்சி படுத்த வேண்டும்.
பீடி, சிகரட், தூள் போன்ற அனைத்து வியாபாரிகளினதும் நன்கொடைகளையும் பள்ளவாசல்கள், கழகங்கள், சமூக சேவை அமைப்புக்கள் புறக்கணித்தல்.
குறிப்பாக தண்டனைகளை அதிகரித்தால் மட்டுமே தவறுகளை குறைக்கலாம் என்ற தொனியில் இந்த கோரிக்கைகள் ஜம்மியதுல் உலமாவிடம் முன்வைக்கப்பட்டது.