இந்திய கடற்படைத் தளபதி- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் சந்திப்பு!

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் தூதுக்குழுவினரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இராஜாங்க அமைச்சர் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் இராஜாங்க அமைச்சர் மற்றும் இந்திய கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.