180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட படகொன்றினை கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்ட போது , படகில் இருந்து கஞ்சாவை மீட்டனர்.

அதனை அடுத்து படகில் இருந்த நபரை கைது செய்ததுடன் , படகினையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா , படகு மற்றும் கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.