புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் ஜயஸ்ரீ போதியை வழிபடுவதற்காக நேற்று சென்றிருந்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.