கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன  சபையினரால் வைத்தியசாலைக்கு மருந்து வழங்கி வைப்பு

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினால் மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு  சிறுவர்களுக்கான பனடோல் பாணி மருந்து ஒரு தொகை இன்று(13) செவ்வாய்கிழமை  வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மருந்தினை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் வண்ணக்குமார்கள் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் பி.தக்சனிடம் கையளித்தனர்.
இதன்போது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஆலய பரிபாலன சபையினர்,  சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றனர், அதன் ஒரு அங்கமாக மருத்துவ சேவைக்காக இவ் உதவி வழங்கப்பட்டுள்ளமை  எடுத்துக்காட்டத்தக்கது.