தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் பணியை ஆரம்பித்தது எதிர்க்கட்சி !

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் இளைஞர் சமூகம், தொழில் வல்லுநர்கள் மற்றும் சமூக அங்கீகாரம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அதன்படி, “உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர் விண்ணப்பம்” என்ற தலைப்பின் கீழ் வேட்பாளர் விண்ணப்பங்களை பொதுச் செயலாளர், ஐக்கிய மக்கள் சக்தி, எண். 592, பங்களா சந்தி, கோட்டே வீதி, பிடகோட் என்ற முகவரிக்கு, அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 287 0211 அல்லது 011 287 0212 என்ற தொலைபேசி இலக்கங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.