உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உத்தர லங்கா கூட்டமைப்பு தனித்து – விமல் வீரவன்ச!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உத்தர லங்கா கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.