சென்னை யாழ் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

(வாஸ் கூஞ்ஞ)

யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கான நேரடி விமான சேவை திங்கள் கிழமை (12.12.2022) காலை முதல் ஆரம்பமாகியுள்ளது. இவ் சேவை இரண்டு வருடங்களுக்கு பிற்பாடு தற்பொழுது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

திங்கள்கிழமை (12) காலை சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்டு வந்த அலையன்ஸ் ஏர் விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் காலை 11.24 மணிக்கு தரையிறங்கியதுடன் பின் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. இதில் முப்பதுக்கு மேற்பட்ட பிரயாணிகள் தங்கள் பிரயாணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது யாழ் பலாலி நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு அதிகாரிகள் கொடி அசைத்து இங்கிருந்து சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

இவ் சேவை வாரத்தில் நான்கு நாட்கள் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.