திருமலையில் பிரமி கவிதை நூல் வெளியீட்டு விழா .!

(அ . அச்சுதன் )
திருகோணமலை அன்பின் பாதை சமூகத்தின் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் உளவியல் துறை பட்டதாரியான சேனையூர் – மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட உளவளத்துணையாளர் பிரம்மியா சண்முகராஜாவின் “பிரமி” எனும் முதலாவது கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வானது எதிர்வரும் 14 .12 . 2022 மாலை 4.00 மணியளவில் தி/மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் இலக்கிய வட்டத்தின் தலைவர் கனக தீபகாந்தன் தலைமையிலும் அன்பின் பாதை ரொசில்டா அவர்களின் நெறிப்படுத்தலிலும் நடைபெறவுள்ளது.

இன் நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக கிழக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சின் பணிப்பாளர் திரு சிவபாலசுந்தரம் சுதாகரன் (பைந்தமிழ் சுடர் நீலனையூர் சுதா) மற்றும்
மதிப்பிற்குரிய அழைப்பாளர்களாக கவிமணி அம் கௌரிதாசன் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சின் அபிவிருத்தி பயிற்சி பிரிவின் பயிற்சி உத்தியோகத்தர். மு.கா.ஸ்ரீதரன் ஆகியோரும் கலந்து சிறப்பிப்பதுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.கஜவிந்தன் அவர்கள் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்கின்றார்.

கவிஞர் ஷெல்லிதாசனால் அவர்களால் நூல் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன் பிரமிபற்றிய நயந்துரைதனை கலை இலக்கிய செயற்பாட்டாளர் தி. லலிதகோபன் நிகழ்தவுள்ளார்.