அடுத்த வருடம் மின்சாரம் தடைப்படும்!

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அடுத்த வருடம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கங்களில் நீர் பற்றாக்குறை நிலக்கரி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த வருடம் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

நிலக்கரி மற்றும் எரிபொருளைப் பெறுவதற்கு டொலர்கள் கிடைக்காத பிரச்சினை காரணமாக அடுத்த வருட ஆரம்பத்தில் தொடர்ந்து மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என கூறினார்.

மின்வெட்டை நிறுத்த மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ள நிலையில் எவ்வாறாயினும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதனால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என மின்சார சபைக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.