பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

இரண்டு வருட இடைவெளியின் பின்னர், யாழ்ப்பாணம் – பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரமொன்றில் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. எதிர்வரும் 12 ஆம் திகதி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விமான போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொவிட் தொற்று காரணமாக விமான போக்குவரத்து கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.