400 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் விமான நிலையத்தில் கைது!

400 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

22 கிலோகிராம் கடத்தல் தங்கத்துடன் நான்கு இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதே, அவர்கள் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தங்கம், சுங்க பிரிவினரின் சோதனை நடவடிக்கையின் போது, கைதானவர்களின் பொருட் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்கள், டுபாயில் இருந்து இந்தியாவின் சென்னை வழியாக இலங்கைக்குள் வந்தவர்கள் என நம்பப்படுகிறது.