காட்டு யானை தாக்கம் மற்றும் கடும் காற்றினாலும் வீடுகள் சேதம்

காட்டு யானை தாக்கம் மற்றும் கடும் காற்றினாலும் இரு வீடுகள் நேற்று (07) சேதத்திற்குள்ளாகின.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடு ஒன்று காட்டு யானையின் தாக்கத்தினால் முழுமையாக சேதப்பட்டுள்ளது. இரவு 7 மணியளவில் குறித்த குடியிருப்பினுள் நுழைந்த யானை வீட்டின் சுவர், யன்னல்கள், கூரை என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது. எனினும் வீட்டிலிருந்தோர் துரதிஸ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும் பாலர் பாடசாலை வேலி, பாடசாலை வேலி என்பவற்றையும் சேதப்படுத்தியுள்ளன.

நேற்றைய தினம் வீசிய கடும் காற்றினால் கடுக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடொன்றில் தேக்கு மரம் வீழ்ந்ததில் வீட்டின் கூரை பகுதியளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளது.