உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும்-தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதன்படி அரசியலமைப்பின் 98ஆவது சரத்தின் 08 ஆவது உபசரத்திற்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்படக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.