ஈரோஸ் ஜனநாயக முன்னணி உள்ளிட்ட மேலும் 7 கட்சிகளுக்கு கட்சிகளாக அங்கீகாரம்.

2022ஆம் ஆண்டு அரசியல் கட்சிகளாக தங்களை அனுமதிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட 7 கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை கட்சி, சிறிலங்கா சமூக ஜனநாயக கட்சி, நாட்டுப்பற்றாளர் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் அறிவுசார் முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக் கட்சிகள் எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சிகளாக செயற்பட முடியுமு; எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ.புஞ்சிகேவா விடுத்துள்ளார்.

இதன்படி இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 86ஆக அதிகரித்துள்ளது.