ஒருமித்துச் செயற்படுதல் – ஈ.பி.ஆர்.எல்.எவ் மாவட்ட செயற்குழு தீர்மானம்

இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி அறைகூவல் விடுத்துள்ள நிலையில் மாகாண சபை முறைமையை முன்னிறுத்தி அதிகாரப் பகிர்வோடு முதற்கட்ட நடவடிக்கைகளுக்கு முனைப்போடு ஒருமித்து செயற்பட வேண்டுமென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாவட்ட செயற்குழு தீரமானம் நிறைவேற்றியுள்ளது.

ஈழமக்கள் புட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமையகத்தில் செயற்குழுவின் ஆறுமுகம் பஞ்சலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக செயலாளர் செல்லத்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இக் கூட்டத்தில், சமகாலம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, மாவட்டத்திலுள்ள செயற்பாடுகளுக்கான சவால்களை எதிர்கொண்டு தற்காலத்திலுள்ள தொய்வு நிலைகளை நீக்கி அனைத்து கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒருமித்து செயற்பட வேண்டும். அத்துடன், தமிழ்த்தேசிய பரப்புக்குள் வேலைத்திட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்கு அப்பால் பொதுவான கட்டமைப்பு ஒன்றின் கீழ் செயற்பட வேண்டுமெனவும், மாவட்டத்திலுள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாவட்ட மட்டத்தில் அனைத்து கட்சிகளோடு ஒன்று இணைந்து ஆலோசனைகளை உள்ளீர்த்து செயற்பட வேண்டும் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மென தாங்கள் விரும்புவதாக திர்மானிக்கப்பட்டது.