மட்டக்களப்பு விமான நிலைய வீதி, திருப்பெருந்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சனீஸ்வர பகவான் ஆலயம் மற்றும் நூதன எழுந்தருளிய பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகள் திருவுருவச்சிலை என்பவற்றிக்கான கும்பாபிஷேக அறிவித்தல்
திருப்பெருந்துறை விமான நிலைய வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் புதிதாகநிர்மாணிக்கப்பட்டுள்ள சனீஸ்வர பகவான் ஆலயம் மற்றும் நூதன எழுந்தருளிய பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிகள் திருவுருவச்சிலை ஆகியவற்றிக்கான கும்பாபிஷேகம் மற்றும் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வசந்த மண்டபம், மணிக்கோபுரம் என்பவற்றின் திறப்பு விழா என்பன எதிர்வரும் 9.12.2022 வெள்ளிக்கிழமையன்று ஆரம்பமாகி, ஆஞ்சநேயர்மூல நட்சத்திரமாகிய 23.12.2002 வெள்ளிக்கிழமையன்று இனிதே நிறைவுற திருவருள் பாலிக்கப்பட்டுள்ளது.
கிரியாவிபரங்கள் பின்வருமாறு:
கர்மாரம்பம்: 9.12.2022 வெள்ளிக்கிழமை காலை 6:20 மணிக்கு ஆரம்பமாகும்.
எண்ணெய்க்காப்பு: 10.12.2022 சனிக்கிழமை காலை 6:30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை
கும்பாபிஷேகம்: 11.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி காலை 7:29 மணிதொடக்கம் 8:11 வரையுள்ள தனு லக்கின சுபவேளையில் இடம்பெறும்.
அதனைத்தொடர்ந்து 11.12.2002 மாலை மண்டலாபிஷேக பூசைகள் ஆரம்பமாகி 11 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்று22.12.2022 காலை 8:00 மணிக்கு சங்காபிஷேக பூசைகள் ஆரம்பமாகி மதிய அன்னதானத்துடன் நிறைவுற்று அன்று மாலைவருடாந்த திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி மாலை 6 மணியளவில் சுவாமி உள்வீதி வலம்வந்து பின்னர்திருப்பெருந்துறை முருகன் ஆலயம் மற்றும் கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலயம் வரை சென்று ஆலயத்தை வந்தடைவார்.
23.12.2022 அன்று ஆஞ்சநேயர் மூல நட்சத்திர விசேட யாக பூசைகள் இடம்பெற்று சுவாமிகளின் தீர்த்தமாடிய பின்னர்அன்னதானத்துடன் பூசைகள் அனைத்தும் இனிதே நிறைவு பெறும். அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் மற்றும் சனீஸ்வர பகவான் ஆகியோரின் அருளைப்பெற்றெகுமாறு அன்புடன் அழைக்கிறோம்
“ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க அஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரசோதயாத்”
ஸ்ரீ ராமஜெயம்
இவ்வண்ணம் – கி மகேஸ்வரன் – ஆலய தர்மகர்த்தா மற்றும் நிர்வாக சபையினர்