வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்!

வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்றும் (வியாழக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சில நிறுவனங்களின் ஊழியர்கள் தமது உணவு நேரத்தில், தமது பணியிடங்களுக்கு முன்பாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் என தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.