2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று!

2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் குழுநிலை விவாதத்தின் 3ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதன்போது, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் கொள்கை வகுப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது

முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், கடந்த மாதம் 14ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று, கடந்த 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, 37 மேலதிக வாக்குகளால், இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.