(ஹஸ்பர்)
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் உப பிரதேச செயலகம், சேருவல சஹன செவன விசேட தேவையுடையோர் நிலையம், தெஹிவத்த மகா வித்தியாலயம் மற்றும் நீலபொல சிவில் பாதுகாப்பு திணைக்கள முகாம் ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கி வசதிகளுடன் கொண்ட குழாய்க்கிணறு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (6) நடைபெற்றது.
இந் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம கலந்து சிறப்பித்ததுடன் இதனை திறந்து வைத்தார்.
குழாய்க்கிணறு தொகுதியொன்றை நிர்மாணிக்க மூன்று இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது. க்ளோபல் இஹ்சான் ரிலீப் நிறுவனம் இத்திட்டத்தை செயற்படுத்தியதுடன் நிதி உதவியினை life for relief and Development நிறுவனம் வழங்கியுள்ளது.
நீர் வசதி இன்மை காரணமாக இம்மக்கள் பல சிரமங்களை எதிர் நோக்கி வந்ததுடன் நீண்ட கால தேவை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
இந்நிகழ்வுகளில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக், சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்ன, க்ளோபல் இஹ்சான் ரிலீப் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜி.அர்ச்சனா சலே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.