இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை

(தலவாக்கலை பி.கேதீஸ்)

வெலிமடை டவுன்சைட் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு அரை பேர் வழங்கல், தொழிலாளர்களை முறையாக நடத்தாமை உள்ளிட்ட விடயங்களுக்கு தோட்ட நிர்வாகம் எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் தீர்வு வழங்காவிடின், போராட்டம் முன்னெடுக்கப்படும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த தோட்டத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை நேரடியாக விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாவிடின் மல்வத்த பிளான்டேஸனுக்கு சொந்தமான அனைத்து தோட்டங்களிலும் பணிப்புரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.