புதிய அமைச்சரவை அமைச்சர்களாக மூவர் நியமனம்? – வெளியான தகவல்

இவ்வாரத்தில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம போக்குவரத்து அமைச்சராகவும் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராகவும் மற்றும் துமிந்த திஸாநாயக்க மின்சக்தி அமைச்சராகவும் எதிர்வரும் நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.