கடந்த அரசாங்கத்தில் தேசிய மட்டத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கும் செலவிடப்பட்டதாக கணக்கிட்டு தவறான செய்தி பரப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எனது புகைப்படங்களை வெளியிட்டு ஜனாதிபதியின் ஊழியர்களின் பராமரிப்புக்காக 6480 மில்லியன் செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக 43% மற்றும் மைத்திரிபால சிறிசேன 57% நிதியை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியாக இருந்த போது தேசிய அளவிலான 7 திட்டங்களை நடைமுறைப் படுத்தியதாகவும் இதற்காக மற்ற அரச நிறுவனங்களில் இருந்து அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தின்படி வெளியான இந்த தகவல் உண்மையாக இருந்தாலும் இந்தத் திட்டங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்துடன் இந்தத் தொகையும் கட்டுவது தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.